Header Ads



ஆற்றல்மிகுந்த இறைவன் தன்னைப்பற்றி இப்படி கூறுகிறான்


அணுக்கள்தான் இதுவரைக்கும் மனித அறிவுக்கு எட்டிய மிகவும் சின்னஞ்சிறிய வத்து. எந்த அளவுக்கென்றால் ஒரு துளி தண்ணீரில் ஐந்தாயிரம் பில்லியன் அணுக்கள் (5,000,000,000,000,000,000,000) உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 


இந்த ஒவ்வொரு அணுவுக்குள்ளும் பல எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன. அவைகளுக்கென தனித்தனியான தொழிட்பாடுகளும் இறுக்கமான வலையமைப்புக்களும் உள்ளன. 


ஒரு அணுவில் காணப்படும் மேற்குறிப்பிட்ட 

ஒவ்வொரு துகள்களிலும் தனித்துவமான செயற்பாடுகளைக் கொண்ட குவார்க்குகள்

எனப்படும் துகள்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு குவார்க்களுக்குள்ளும் வேறு ஏதாவது வத்துக்கள் உள்ளனவா! என்பது பற்றி இதுவரைக்கும் தெரியவில்லை. 


ஏனெனில் தற்போதைய மனித முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் இவ்வளவுதான் அறிய முடிந்துள்ளது. 


ஆற்றல் மிகுந்த இறைவன் தன்னைப் பற்றி ஒரு வான் மறை வசனத்தில் இப்படி அறிமுகம் செய்கிறான்:

((அவன் மறைவான யாவற்றையும் அறிந்தவன்; விண்ணிலோ மண்ணிலோ ஓர் அணுவளவோ அதைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ எதுவும் அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் எதுவும் இல்லாமல் இல்லை.))

📖 அல்குர்ஆன் : 34:3


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.