Header Ads



உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம்


உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார  தலைமையில்  இன்று (09)  தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.


அமைதி, சுபீட்சத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்ட பாரம்பரிய “கிரி கொரஹா” சம்பிரதாயம் உட்பட ஆதிவாசிகளின்  கலாசார அம்சங்களுடன் இந்நிகழ்வு  இருந்தது. அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதி,  வெள்ளை சந்தன செடியையும் நட்டார்.


ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, ஜனாதிபதிக்கு  நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார். ஜனாதிபதி அநுரகுமார  ஆதிவாசியின தலைவருக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.


பாரம்பரிய அறிவு, தேசிய வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இலங்கையில் முதல் ஆதிவாசி மூலிகை சவர்க்காரம் "கைரி" அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆயுர்வேத சவர்க்காரத் தயாரிப்பு பயிற்சியை நிறைவு செய்த ஆதிவாசியின பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

2025-08-09

No comments

Powered by Blogger.