மக்கள் பொறுமை இழந்து விட்டனர் என்பதை அமைச்சர் லால்காந்த அறிந்து கொண்டிருக்கின்றார்
அரசியல்வாதிகள் அரசின் நிதியை உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறிய அரசால் அதனை நிரூபிக்க முடியாது போயுள்ளது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்காது. அநுரகுமாரவின் பொய்களைக் கேட்டுக் கேட்டு இன்று மக்கள் பொறுமை இழந்து விட்டனர் என்பதை அமைச்சர் லால் காந்த நன்கு அறிந்து கொண்டிருக்கின்றார். பொய்களுக்கு ஆயுள் குறைவு என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பே அரசுக்குப் பாரிய சுமை எனத் தேசிய மக்கள் சக்தி பரவலான பிரசாரங்களை முன்னெடுத்தது. ஆனால், இன்னும் குறுகிய காலத்தில் அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எவரும் தனித்து வீதியில் செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.
- சமிந்த விஜேசிறி Mp -

Post a Comment