Header Ads



குட்டி லண்டனில் நிரம்பி வழியும் மக்கள்


குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்கு இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர்.


நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் கிறகரி வாவி கரையில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் களியாட்ட நிகழ்வுகளிலும், துவிச்சக்கர வண்டிச் சவாரி, படகு சவாரி மற்றும் மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் தமது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.


நுவரெலியாவில் காணப்படும் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன.

No comments

Powered by Blogger.