Header Ads



அதிகாரிகளுக்கு அவர் வைத்த நிபந்தனைகள்..


(Nooh Mahlari)


சூழல் மீது பழிபோடுவோர் நம்மிடையே அதிகமாக உள்ளனர்.


ஏன் தொழவில்லை? ஏன் ஹலால்-ஹராம் பேணவில்லை? ஏன் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றவில்லை? ஏன் முன்னேறவில்லை?


இதுபோன்ற கேள்விகளுக்கு பலர் சூழலை குறை சொல்வார்கள். இவர்கள் சூழல் கைதிகள். சூழ்நிலை இவர்களை மாற்றிவிட்டது. 


நாம்தான் சூழலை மாற்றவேண்டும். சூழல் நம்மை மாற்றிவிடக் கூடாது.


கொடுங்கோலன் ஃபிர்அவ்னுடைய மனைவியாக இருந்தும் அன்னை ஆசியா குர்ஆன் கூறும் மிகச் சிறந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். சூழல் அவரை மாற்றவில்லை.


சகோ டேனியல் பிரிட்டனைச் சார்ந்தவர். இஸ்லாத்தைத் தழுவிய பிறகு போலீஸ் அதிகாரியாக பணிபுரிய தனது ஆவணங்களை சமர்ப்பித்தார். 


அப்போது அதிகாரிகளுக்கு அவர் வைத்த நிபந்தனைகள்:


1. வெள்ளிக்கிழமை தொழுகையை பள்ளிவாசலில் தொழ அனுமதிக்க வேண்டும்.


2. ஐந்து நேரத் தொழுகைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் தொழ அனுமதிக்க வேண்டும்.


3. நான் ஒரு முஸ்லிம். எனவே அந்த அடையாளத்தை வெளிப்படுத்த தாடி வைக்க அனுமதிக்க வேண்டும்.


நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


பிரபலமான தொலைக்காட்சி நிகழ்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தைக் கற்பதாகவும், மக்களை அதன்பால் அழைப்பதாகவும் கூறினார்.


இறுதியாக அவர் கூறியதுதான் நமக்கான பாடம்:


"நான் ஒரு முஸ்லிம். முஸ்லிமாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது இஸ்லாத்தை நான் மறைக்க விரும்பவில்லை. என்னைப் பார்க்கும் அனைவரும் என்னை ஒரு முஸ்லிமாக அங்கீகரிக்க வேண்டும்''.


என்னே ஒரு மனோதிடம்! அருமை!! சூழலை ஒருபோதும் அவர் குறை கூறவில்லை.


இஸ்லாத்தை அறிமுகப்படுத்த சிறந்த வழி என்ன தெரியுமா? முஸ்லிமைப் போன்று நடந்துகொள்வதுதான். 


இஸ்லாத்தைக் குறித்து பேசுவதைவிட முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதுதான் இன்று தேவைப்படுகிறது.


அதைத்தான் இந்த டேனியல் செய்கிறார்.

No comments

Powered by Blogger.