பிரதமரின் பேச்சை அமைச்சர் மறுதலிப்பது சம்பிரதாயத்தை மீறுவதாகும்
தேசிய மக்கள் சக்தி - ஜே.வி.பி. உட்கட்சி பூசலை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது சிறுப்பிள்ளைத்தனமானது. பிரதமரின் பேச்சை அமைச்சர் ஒருவர் மறுதலித்து பேசுவது, சம்பிரதாயத்தை மீறும் செயற்பாடாகும். நாம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை கோரவுள்ளோம். அமைச்சர் வசந்த சமரசிங்க தனது கூற்றை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு சிரேஷ்டத்துவத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும். நாட்டின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் நாடாளுமன்றில் தான் கூறுவது அனைத்தும் பொய் என்று சொல்வதென்றால் இருபது வருடங்களாக பொய்தானே கூறியுள்ளார்.”
(இராமநாதன் அர்ச்சுனா Mp)

Post a Comment