பலஸ்தீனம் - இஸ்ரேல் யாருடைய வரலாறு அதிக எடைகொண்டது என்பது பற்றிய விவாதம் இனி இல்லை
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் யாருடைய வரலாறு அதிக எடை கொண்டது என்பது பற்றிய விவாதம் இனி இல்லை. இது ஒரு மனித பேரழிவாக மாறிவிட்டது. அகிம்சை மட்டுமே ஒரே வழி, வேறு வழியில்லை. பிரதேசம் அல்லது வளங்களை வெல்வதை விட, நமது மனிதநேயத்தை இழப்பது குறித்து நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். நாம் அதை இழந்தால், எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
'இஸ்ரேலிய இராணுவத்தின் ஆலோசனை மற்றும் எச்சரிக்கைகளை மீறிஇ காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது அங்கு பிணைக் கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்இ மேலும் பாலஸ்தீன பொதுமக்களைக் கொல்லக்கூடும்' என நியுயோர்க் டைமஸ் வெளியிட்ட செய்தியை மீள்பதிவிட்டே சஜித் பிரேமதாச இப்படி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment