Header Ads



துட்டகைமுனு மன்னன் போன்று, மகிந்தவும், அரசர் தான்


மகிந்தவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் சென்று வருவது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது. 


நேற்று (18) அநுராதபுரத்தில் இருந்து  மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பார்ப்பதற்காக பரிசுப் பொருட்கள், உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்திருந்தனர். இக் காட்சிகள்  சமூக வலைத்தளங்களில்  ஒளி பரப்பும் செய்யப்பட்டன.


நேற்றைய இந்த சந்திப்பின் போது,  மகிந்தவைப் பார்க்க வந்த  மக்களின் முன்னிலையில், ராஜபக்சக்களின் தீவிர விசுவாசியான திஸ்ஸ குட்டியாராச்சி பேசும்போது, “நாம் இன்னும் துட்டகைமுனு மன்னனை ஏன் மறக்காமல் இருக்கின்றோம்.  அவர் யுத்தம் செய்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதனால் தானே, அதேபோலதான் மகிந்தவும், பிரிவினைவாத போரை முடிவுக்குக் கொண்டு வந்த மக்களை காப்பாற்றியதால் அவரும் அரசர் தான்” என்று வந்திருந்த மக்களை ஆவேசப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.