இது எவ்வளவு பெரிய அநீதி...??
வடக்கு ஜெருசலேமின் ஹஸ்மா நகரில் கமது பைஸ் சபிஹின் குடும்பத்தினருடைய வீட்டிற்கு இன்று (05) டிராக்டர்கள் மூலம் இஸ்ரேலிய துருப்புக்கள் வந்து, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், வீட்டை இடிக்க வேண்டும், உடனடியாக வெளியேற கோரினர்.
வீட்டை காலி செய்யுங்கள்... நாங்கள் இடிக்க விரும்புகிறோம், உங்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்றும் அச்சுறுத்தி, அவர்களை வெளியேற்றச் செய்துள்ளனர். இன்று தங்கள் மகனின் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த கொடிய செயல் நிகழ்ந்துள்ளது.
அந்த வீட்டில் நிலவிய மகிழ்ச்சி ஒரு கொடூரமான அதிர்ச்சியாக மாறியது. கொஞ்சம் மனச்சாட்சியுடன், சொற்ப மனிதாபிமானத்துடன் சிந்தித்தப் பாருங்கள் இது எவ்வளவு பெரிய அநீதி என்ன...??

Post a Comment