Header Ads



அறுகம்பை விடயத்தில் SLMC தலைவரும், பொத்துவில் பிரதேச தவிசாளரும் வேறு நிலைப்பாட்டில் உள்னர்



இனம் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு அரசியல் செய்வதைவிட்டு பொது எதிரியை அறிந்துகொண்டு அதற்காக போராடுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவை என்ற விடயத்தில் மக்கள் வாழ்கின்றனர்.  அந்த நோக்கத்தில் மக்கள் இருந்ததாலே வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டம் தோல்வியடைந்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிளவுபட்டு இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் இருக்கும் 52பேர் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக சமூகவலைத்தலங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதுதொடர்பில் பலரும் எங்களிடம் கேட்டனர். அதற்கு நான்,எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் எங்களில்  43பேர் தொடர்ந்து எதிர்க்கட்சி பக்கமே அமர்ந்திருக்கின்றனர் என்று தெரிவித்தேன்,


எதிர்க்கட்சிக்கு விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லாத சந்தர்ப்பத்தில், சமூகத்தில் பொய் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.அரசியலில் தொண்டைக்கு களவாக மருந்து குடிக்காதவர்கள் எங்களை  விமர்சிக்கின்றனர்.இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பல்வேறு பாபியாகள் தொடர்பில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அந்த அனைத்து மாபியாக்களும் தங்களின் அரசியல் பயணத்துக்காகவே கட்டியெழுப்பப்பட்டன என்பதை அவர்கள் மறந்துள்ளனனர்.


எமது நாட்டில் காலம் தொட்டு தெற்குக்கு புரியாவிட்டாலும் வடக்கு கிழக்குக்கு  ஹர்த்ததால் என்ற சொல் பிரபல்லியமாகும். ஒருசில தோற்றுப்போன அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து  திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தன.என்றாலும் அந்த  ஹர்த்தால் போராட்டம் தாேல்வியடைந்துள்ளதை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.


தேர்தலிலும் தோல்வியுற்று மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சி தோல்வியடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இருக்கும் காத்தான்குடியில் ஹர்த்தால் பாேராட்டம் தோவியடைந்துள்ளது. அரசியல் செய்வதற்கு தலைப்பு இல்லாமல்போகும்போது, பல்வேறு தலைப்புகளை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.


அறுகம்பை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, அவரது கட்சியின்  பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் வேறு நிலைப்பாட்டில் இருக்கிறார். மக்களை கோபமடையச்செய்ய முன்னர், பொய்யான செய்திகளை சமூக மயமாக்குவதற்கு முன்னர் தங்களின் கட்சியை சரி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கிறோம். சூதாட்டம் தொடர்பில் முஸ்லிம் பக்தர் என்றவகையில் எங்களுக்கு  கொள்கை ரீதியில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்றார்.


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


No comments

Powered by Blogger.