Header Ads



அனுராதபுரத்தில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு


அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து  தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.   


வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது  கால்களை கழுவுவதற்காக குறித்த வாவிக்கு சென்றபோது நீருக்குள் பல தோட்டாக்கள் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


 அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார்  குறித்த வாவிக்கு சென்று மேற்கொண்ட தேடுதலில் 5,038 தோட்டாக்களை மீட்டுள்ளனர்.


குறித்த இடத்தில்  விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொண்ட மேலதிக சோதனையின் போது  11 மெகசின்கள் மற்றும் 3150 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.