இப்படியெல்லாம் செய்யாதீர்கள்
மட்டக்களப்பில் தாய், தந்தையை இழந்த 18 வயது இளைஞனை தங்கவைத்து தமது பிள்ளையப் போல் வளர்த்து, படிக்கவைத்து, பராமரித்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும், திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்டதை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய, முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியதை பொலிஸார் கண்டறிந்தனர்.
வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக்கொண்டு நண்பனுடன் சேர்ந்து காத்தான்குடி நகைகடை ஒன்றில் விற்று, பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள், ஸ்மாட் கையடக்க தொலைபேசி, உடைகளை வாங்கியதுடன், உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
- சரவணன்-

Post a Comment