செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
யாழ் செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.

Post a Comment