காசாவில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினரை காணவில்லை - ஹமாஸ் பிடித்ததாக தகவல்
காசா அல்-ஜைத்தூன் பகுதியில் பெரும் போர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அல் ஜசீரா ஊடக ஆய்வாளர் கூறுவதாவது:
அல்-ஜைத்தூன் பகுதியில் நடைபெற்ற சண்டையை இஸ்ரேலிய இராணுவம் 'இரத்தம் தோய்ந்தது' என வர்ணித்துள்ளது
மேலும் பெரும்பாலான காயங்கள் தீவிரமானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
இந்த எதிர் தாக்குதல் சம்பவங்களின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோரை வெளியேற்ற இஸ்ரேலிய இராணுவம் 6 ஹெலிகாப்டர்களை அனுப்பியது.
காணாமல் போன வீரர்கள் குறித்து தகவல்கள் வெளியிட இஸ்ரேல் தடை விதித்தது. இந்த நிகழ்வில் இஸ்ரேலிய இராணுவத்தினர் காணாமல் போயினர்.
சில ஊடகங்கள் 4 இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் பிடித்ததாக தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment