முஸ்லிம் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த 3 கிரிமினல்கள்
இந்துத்துவ அமைப்பின் தலைவர் சாகர் பாட்டீல், கிருஷ்ணா மடா, நாகன கவுடா பாட்டீல் ஆகியோர் தான் கைதானவர்கள். குற்றவாளிகள் தற்போது ரிமாண்டில் உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த 13 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 13 வருடங்களாக அந்தத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் சுலைமானை பணியிட மாற்றம் செய்யவே இந்த நபர்கள் இந்தச் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர்.
கிருஷ்ணா மடா, வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே சாகர் பாட்டீல் அவரை இந்தச் சதித்திட்டத்தில் சேர்த்திருக்கிறார். பின்னர், மூன்று வகையான விஷம் கலக்கப்பட்ட திரவம் இருந்த பாட்டிலை கிருஷ்ணா மடாவிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், கிருஷ்ணா மடா தானே நேரடியாக தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை இதற்கு தூண்டியுள்ளார். அதற்குப் பிரதிபலனாக, ஒரு பாக்கெட் சிப்ஸும் 500 ரூபாயும் அந்த மாணவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து உண்மைகளும் விசாரணையில் தெரியவந்தன.
மேலும், தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப் பயன்படுத்தப்பட்ட பாட்டில் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.
Thejas News

Post a Comment