28 வயது இளைஞனை, 26 வயது இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம்
அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர், பொலிஸாரினால் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டபோவா பகுதியில் இடம்பெற்ற பெரஹரா பார்ப்பதற்கு 28 வயதான இளைஞன் சென்றுக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் வைத்து 26 வயதான ஒருவரை சந்தித்துள்ளார்.
26 வயது இளைஞனும் பெஹரா பார்வையிடுவதற்காக செல்வதாக கூறியுள்ளார். அந்த 26 வயது இளைஞனின் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஏறி சென்றுள்ளனர். பெரஹரா நிறைவடைந்து இரவு 11 மணியளவில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று மரண அச்சுறுத்தல் விடுத்து, 28 வயது இளைஞனை, 26 வயதான இளைஞன் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
(சுமண சிறி குணதிலக்க)

Post a Comment