Header Ads



2029 ஆம் ஆண்டு நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோம்..

 


(இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துச் சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள்.கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.


சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலத்தின் போது பல்வேறு காரணிகளால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஒன்றிணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.


கட்சியில் இருந்து விலகிச் சென்ன முன்னிலை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும்,கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது.இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துச் சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள்.கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும்.


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறது. 2029 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் அதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.