Header Ads



தமிழ்பேசும் 15 Mp க்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்


வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனது கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும்  சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இவ் நடவடிக்க்களை ஆராய்ந்து மக்களுக்கான தீர்வை எட்டும் வகையிலான கலந்துரையாடல் நாளைய தினம் 7/8/2025 வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.