கொலைக்கார மருத்துவர்களினால், முஸ்லிம் சிறுவனுக்கு ஏற்பட்ட அக்கிரமம்
இந்தியா - அயோத்தியில் ராஜரிஷி தசரத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த, ஆரிப் என்ற 12 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு சென்ற, அவனது தந்தையிடம் முஸ்லிம்கள் என்பதால், மருத்துவமனையில் படுக்கை இல்லை, ஆக்ஸிஜன் இல்லை எனச்சொல்லி வேறு மருத்தவமனைக்கு கொண்டு செல்லுமாறு பணியில் இருந்த மருத்துவர்கள் கூறி, அந்த சிறுவனுக்கு மருத்துவம் பார்க்க மறுத்து விரட்டியுள்ளனர்.
அவரது தந்தை முனீர் தனது மகனை தோளில் சுமந்தவாறே, வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு முன்பாகவே, தந்தையின் தோளிலேயே அந்த சிறுவன் மரணித்துள்ளான். அந் த சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.
என்ன கொடுமை இது..?
முஸ்லிம்கள் என்பதற்காக ஏன் இப்படி பாரபட்சம் பார்க்கிறார்கள்..?
அக்கிரமக்காரர்கள், அநீதியிழைப்போர், கொலைக்கார மருத்துவர்கள், அவர்களுக்கு துணை நிற்போர் எப்போது திருந்துவார்கள்..??

Post a Comment