இலஞ்சம் வாங்கி சேகரித்த 100 கோடி ரூபா சொத்து, 3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி (வீடியோ)
இவர், சாலைகள், பாலங்கள் கட்டுமானத்தை இவர்தான் கவனித்து வந்தார். லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டில் சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த வினோத் ராய், வீட்டில் இருக்கும் லஞ்ச பணத்தை இரவு முழுவதும் ரூபாய் நோட்டுகளை எரித்து சாம்பலாக்கி, கழிவுநீர் குழாய் வழியாக ஊற்றியுள்ளார். கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மேலும் பணத்தை எரிக்க முடியவில்லை. அதற்குள் அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்து சோதனையை தொடங்கினர்.
எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் கழிவு நீர் குழாய்களில் சிக்கியிருந்ததை அவர்கள் கண்டு திடுக்கிட்டனர். ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை அவர்கள் எரித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் பாதி எரிந்த நிலையில் ரூ.20 லட்சம் பணமும், ரூ.40 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.100 கோடி மதிப்பில் 18 சொத்து ஆவணங்கள், ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.

Post a Comment