Header Ads



எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது இருக்கட்டும், உங்கள் தந்தை எங்கிருக்கின்றார்..?


"எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்." என ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலடி கொடுத்துள்ளார்.


தனது தந்தையைக் கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.


இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,"சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது எமக்குத் தெரியாது. அதில் நாம் தலையிடுவதும் கிடையாது.


எனினும், கைது பயத்திலேயே ராஜித பதுங்கி இருக்கக்கூடும். சிறைச்சாலையில் இருப்பதை விடவும் ஒளிந்திருப்பது கஷ்டமாகவே இருக்கும். அந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வரட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்."என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.