Header Ads



தற்கொலை செய்த ராஜேஷ் - நிர்க்கதியான குடும்பம், கைகொடுத்த மௌலவி அன்ஸாரி


உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்  மவுலவி அன்ஸாரி ஸுஹ்ரி.


இந்தியா - ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் கடன் தொல்லை காரணம் இரண்டு வாரங்கள் முன்பு தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.


ராஜேஷுக்கு மனைவியும் 10ம் வகுப்பு படிக்கும் 15வயது, 2ம் வகுப்பு படிக்கும்  ஆறு வயது என்று இரண்டு பெண் குழந்தைகளும், வயதான தாயும் உண்டு.


இதற்கிடையில் கடனுக்கு ஈடுவைத்த வீடு ஜப்திக்கு வர செய்வதறியாது திகைத்த ராஜேஷின் தாயார் பானுமதி அம்மா தெரிந்தவர்கள் பலரிடமும் சென்று உதவி கோரிய போதும் எவரும் முன்வரவில்லை.


விதவை மருமகளும் இரண்டு பெண் பேரக் குழந்தைகளுடன் கண்கலங்கி நிற்கும் பானுமதி அம்மாவின் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட ராஜேஷின் தற்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அம்பலப்புழை  காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர்  ஆலப்புழா ஜும்மா மசூதி இமாம், மவுலவி அன்ஸாரி ஸுஹ்ரி அவர்களைச் சந்தித்து, நிலைமையை சொல்ல அனுப்பி வைத்தார்.


பானுமதி அம்மாவின் சங்கடங்களை கேட்டு வருந்திய மவுலவி அன்ஸாரி, பானுமதி அம்மாவின் நிலையை  அவரை அருகில் அமர்த்தி,  ஒரு வீடியோவாக பதிவு செய்து, ராஜேஷ் மனைவி வங்கி கணக்குடன் தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்ததில் நல்லுள்ளம் படைத்தவர்கள் அனுப்பிய தொகை ஓரளவு ஜப்தியை தற்காலிகமாக நிறுத்தி, அந்த குடும்பத்திற்கு உதவியது.


ராஜேஷின் இளைய மகள்  ஆறு வயதான வரதா எப்போதும் தந்தையின் நினைவாக இருந்தவளை, தனது வீட்டுக்கு அழைத்து வந்து சில நாட்கள் தனது மகளுடன் சேர்த்து  2வது மகளாக வளர்த்தப்போவதாகவும் கூறியுள்ளது, மவுலவி அன்ஸாரி ஸுஹ்ரியின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது..


Colachel Azheem

No comments

Powered by Blogger.