Header Ads



மகத்தான சாதனையாளர் முஹம்மது மிதிலாஜ்.


மகத்தான சாதனையாளர் முஹம்மது மிதிலாஜ். (வயது 9) உலகப் பொதுமறை திருக்குர்ஆன் முழுவதும் கையெழுத்து பிரதியாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் மிதிலாஜ். 


குர்ஆன் அச்சு பிரதிகளுக்கு நிகராக, மிக நேர்த்தியான கையெழுத்து பிரதி ஆறரை வயதில் சாதாரணமாக துவங்கிய இந்த ஆர்வம், மிதிலாஜின் இரண்டரை ஆண்டு கடின உழைப்பும், சோம்பலற்ற திறமையும் இணைந்து 9 வயதில் நிய்யத் பூர்த்தியானது. 


இந்தியா காசர்கோடு மாவட்டத்தில் உதும கிராமத்தை சேர்ந்த மிதிலாஜின் தந்தை மவுலவி ஜாஃபர் ஹுதவி காசர்கோடு தாருல் இர்ஷாத் அகாடமி அரபிக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வருபவர். மிதிலாஜின் பள்ளிக்கூட நேரம் போக, திருக்குர்ஆன் கையெழுத்து பணிக்கு ஊக்கம் தந்து, பிழை திருத்தம் செய்து, உதவியுள்ள அவரது தாயார்  பாத்திமா வஃபியாவின் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது.







No comments

Powered by Blogger.