Header Ads



நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

 


நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள  வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 


தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியானார். 


குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த சுமார் 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


தீ பரலுக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.