முதல் சம்பளத்தை பள்ளிவாசலுக்கு வழங்கிய உறுப்பினர்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின், தனது முதலாவது சபை அமர்வின் சம்பளத்தை மீராவோடை றிழ்வான் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
தான் தேர்தலில் வெற்றி பெற்றதும் கிடைக்கும் முதலாவது சம்பளத்தை றிழ்வான் பள்ளிவாசலுக்கு வழங்குவேன் எனும் வாக்குறுதியை அவர் திங்கட்கிழமை (30) நிறைவேற்றியுள்ளார்.
பள்ளிவாசலுக்கு நிதி அன்பளிப்பை செய்து இவ்வாறு முன்மாதிரி மிக்க செயலை செய்த மீராவோடை மேற்கு வட்டார உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வினுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்

Post a Comment