சுற்றுலாவுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு இலவச 90 நாள் On Arrival விசா
ஜனாதிபதி அநுரகுமாரவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு முடிவு செய்துள்ளது.
இந்த விசாக்கள் வழங்குவது 2025 ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெற, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல், மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.
இதன் ஊடாக தமது அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று மாலைதீவு அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.

Post a Comment