Header Ads



40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா


40  நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது


“கடந்த காலத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா கட்டணமின்றி இலங்கைக்கு வரும் வாய்ப்பை வழங்கினோம். இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவர். 


இந்தத் தீர்மானத்தால், அரசு திறைசேரி ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும். இந்த நேரடி வருவாய் இழப்பு இருந்தாலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் மறைமுகமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வருமானத்தை அதிகரிக்கும் பொறுப்பு, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள உங்களிடம் உள்ளது,” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.