Header Ads



பெண் கழுத்தில் அணிந்திருந்த, ஒரு மில்லியன் ரூபாய் தங்க நகைகள் கொள்ளை


கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் முன்பாக பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகை திருப்பட்டுள்ளது.


திருட்டில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளனர்.


கொள்ளையர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணையை முன்னெடுத்துளள்னர்.


நேற்று முன்தினம் இந்தக் கொள்ளை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இளம் பெண் வீதியில் பயணித்த போது நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் கொள்ளையில் ஈடுபட்டமை அருகிலிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.


மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் நம்பர் பிளேட் இல்லை என்று அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


தங்க நகையை திருடிய சந்தேக நபர் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் ஒரு கையில் பச்சை குத்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.


கொள்ளையர்கள் தங்க நகையை திருடி வத்தளை நோக்கி தப்பிச் சென்றனர். சந்தேக நபர்கள் தொடர்பான புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591606 என்ற எண்ணை அழைக்குமாறு கிரிபத்கொட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.