இலங்கையர்கள் மிதமிஞ்சிய மருந்துகளை பயன்படுத்துவதாக கவலை
இலங்கை மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் உலக தரத்தைவிட மிக அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது 863 பொதுப் பெயர் மருந்துகள் (generic drugs) கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் மூன்றில் இரண்டு பாகம் இறக்குமதி செய்யப்பட்டவையாகவும், மற்றவை உள்ளூர் தயாரிப்புகளாகவும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மருந்து வகைகள் அவசியமில்லாமல் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தவறான மருந்தளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாத காரணத்தால் மருந்துகளின் பாவனை மிக அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் 863 மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட இதைவிட குறைவாகவே மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்தளிப்பு தொடர்பான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நவீன நெறிமுறைகள் கொண்டு 450–500 மருந்துப் பிரிவுகளுக்கு இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு வருடாந்த மருந்து செலவுகளில் பெரும் சிக்கனத்தை ஏற்படுத்தும் எனவும், அரசு ஆண்டுக்கு 185 பில்லியன் ரூபாவினை மருந்துகளுக்காக ஒதுக்கி வருவதாகத் தெரிவித்தள்ளார்.
உரிய முறையில் தகவல்கள் பெற்றுக் கொண்டு கொள்வனவு செய்யத் தவறியதன் காரணமாக நாட்டில் மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
Post a Comment