Header Ads



ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கோரி ஹட்டனில் பேரணி

 
ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் நேற்று (01) ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது.


மலையக அறக்கட்டளை என்ற பெயரில் பல அரச சார்பற்ற அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.


ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் தொடங்கிய பேரணி, ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபம் வரை சென்றடைந்தது. இதன்போது ஓரினச்சேர்க்கையாளர் சமூகமும் பேரணியில் இணைந்துக் கொண்டதோடு, பல தோட்டத் தொழிலாளர்களும் கலந்துக் கொண்டு நகர சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.


தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்குவதற்காக 2ஆவது முறையாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நுவரெலியாவிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.