Header Ads



தீக்­கி­ரை­ சம்­ப­வத்தில் தயா­சிறி முன்­னிலை வகித்தார், இவர் யாரென்பதை முஸ்லிம்கள் நன்கு அறி­வார்கள்


 (எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)


குரு­நாகல் -ஹெட்­டி­பொல நகரம் தீக்­கி­ரை­யான சம்­ப­வத்தில் தயா­சிறி ஜய­சே­கர முன்­னிலை வகித்தார். இவர் யார் என்­பதை முஸ்லிம் மக்கள் நன்கு அறி­வார்கள். எமது சமூகம் இவரை ஒரு­போதும் ஏற்­காது என்று தேசிய மக்கள் சக்­தியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.எம். அஸ்லம் தெரி­வித்தார்.


இதற்கு பதிலளித்த ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர, என்­மீது போலி­யான, பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார். இன­வா­தத்­துடன் நான் ஒரு­போதும் செயற்­ப­ட­வில்லை. ஹெட்­டி­பொல பகுதி முஸ்லிம் மக்­களை நான் காப்­பாற்­றினேன். இந்த குற்­றச்­சாட்டை மீளப்­பெற வேண்டும் என்று வலி­யு­றுத்­தினார்.


பாரா­ளு­மன்­றத்தில் புதன்­ கி­ழமை நடை­பெற்ற வெளி­நாட்டு தீர்ப்­புக்­களை பரஸ்­பரம் ஏற்­றங்­கீ­க­ரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலு­வு­றுத்தல் சட்­டத்தின் கீழான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிய தேசிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.எம். அஸ்லம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர முஸ்லிம் மக்கள் ஒரு­சில விட­யங்­களை முன்­வைத்தார். அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களை ஒன்­றி­ணைத்துக் கொண்டு நாட்டை முன்­னோக்கிக் கொண்டுச் செல்ல முயற்­சிக்­கிறோம்.


பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை அனை­வரும் நன்கு அறிவோம். ஹெட்­டி­பொல நகரம் தீ வைக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கு இவர் தான் முன்­னிலை வகித்தார். இவரை முஸ்லிம் மக்கள் ஒரு­போதும் ஏற்றுக் கொள்­வ­தில்லை. இந்த சம்­ப­வத்தை இவர் மறந்து விட்­டாரா அல்­லது மாற்­ற­ம­டைந்து விட்­டாரா என்­பது தெரி­ய­வில்லை.


இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை முன்­வைத்து உரை­யாற்­றிய தயா­சிறி ஜய­சே­கர இவர் என்­மீது போலி­யான, பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார். இன­வா­தத்­துடன் நான் ஒரு­போதும் செயற்­ப­ட­வில்லை. ஹெட்­டி­பொல பகுதி முஸ்லிம் மக்­களை நான் காப்­பாற்­றினேன்.


இந்த சம்­பவம் தொடர்பில் உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே தெரி­யாத விட­யங்கள் பற்றி பேச வேண்டாம். இந்த குற்­றச்­சாட்டை மீளப் பெற்றுக் கொள்­ளுங்கள் அல்­லது நீக்கிக் கொள்­ளுங்கள். முஸ்லிம் சமூ­கத்­துக்கு இந்த அர­சாங்­கத்தால் இழைக்­கப்­படும் அநீதி பற்­றியே பேசினேன். ஆகவே தெரி­யாத விட­யங்­களை பேசா­தீர்கள் என்றார்.


இதனைத் தொடர்ந்து எழுந்து உரை­யாற்­றிய எம்.கே.எம்.அஸ்லம், நான் பிறி­தொரு மாவட்ட உறுப்­பி­ன­ரல்ல, குரு­நாகல் மாவட்­டத்தை சேர்ந்தவன். ஹெட்டிபொல நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையாக அறிவேன். இவரது செயற்பாட்டையும் நன்கு அறிவேன். ஆகவே இவர் மீது முன்வைத்த குற்றச்சாட்டை ஒருபோதும் மீளப்பெற்றுக்கொள்ள போவதில்லை என்றார்.- Vidivelli

No comments

Powered by Blogger.