மத்திய கிழக்கில் போர்ச் சூழல், இலங்கைக்கு நேரடியான பல பாதிப்புக்கள்
செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் எந்த நாடுகளுக்கும் சார்பாக செயற்படவில்லை. அமைதிக்காகவே குரல் கொடுப்போம். இந்த மோதல் நிலைமை காரணமாக வலுசக்தி துறை, தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதித்துறை மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் என பல துறைகளிலும் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்படும்.
இவை அந்நிய செலாவணி வருமானத்திலும் தாக்கம் செலுத்தக் கூடும். இவை மாத்திரமின்றி தற்போது உலகலாவிய ரீதியில் எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.
இவ்வனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையிலேயே அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு மாற்றுவழியைத் தேட வேண்டியுள்ளது, ஏனைய துறைகளில் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment