Header Ads



நெஞ்சம் நெகிழச் செய்கின்ற படம்..!


வீரஞ்செறிந்த நகரத்திலிருந்து வந்துள்ள புகைப்படம்தான் இது. மலைக்க வைக்கின்ற படம். 


 தாக்குதலுக்காளாகி இளைஞர் ஒருவர் பெருங் குழி ஒன்றில் போய் விழுந்தார். 


சுற்றிலும் இருந்த மற்ற இளைஞர்கள் எந்நேரமும் தாக்கப்படலாம் என்கிற அச்சுறுத்தல்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு,


ஒருவர் மற்றவரின் கைகளை வலுவாகப் பற்றிப் பிடித்தவாறு உறுதியான சங்கிலியாகவே மாறினார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு சில நிமிடங்களில் அந்தக் காயமுற்ற இளைஞரை மேலே கொண்டு வந்துவிட்டார்கள். 


பரஸ்பர ஒற்றுமையைப் பறைசாற்றுகின்ற படம்தான் இது.


பரஸ்பர ஒத்துழைப்பைப் பறைசாற்றுகின்ற படம்தான் இது. 


பணிந்துவிடாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு காரியமாற்றுவதை சித்திரிக்கின்ற படம்தான் இது. 


உண்மை என்னவெனில், 


வீரஞ்செறிந்த அந்த நகரத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு படமும் பரவசப்படுத்துகின்ற, ஓ போட வைக்கின்ற, நெஞ்சம் நெகிழச் செய்கின்ற படங்களாகத்தாம் இருக்கின்றன. 


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. 


அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.

 

படமும் தகவலும் : அபுல் அஃலா சுப்ஹானி


- Azeez luthfullah -

No comments

Powered by Blogger.