Header Ads



இப்படியும் ஒரு நல்ல சவூதிக் காரர்


சவூதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு ஓட்டுநராக பணியாற்றிய எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜியாத் பஷீர் (வயது 36), விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருடைய சவூதி ஸ்பான்சர் மிகுந்த துயரத்தில் உள்ளார்.


ஜியாத் கடந்த ஏழு ஆண்டுகளாக ரியாத் எக்ஸிட் 8 பகுதியில் உள்ள ஒரு சவூதியின் வீட்டில் வீட்டு ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை(13ஜூன்) மதியம், அவரது இடத்தில் ஏசி கம்பிரசர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் அவர் தீவிரமான தீக்காயங்களுக்கு ஆளானார்.

உடனடியாக அவரை எக்சிட் எண் 9இல் உள்ள அல் முவாசத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், ஞாயிற்றுக்கிழமை(15ஜூன்) பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்தார்.


ஜியாதின் மரணம் அவரது ஸ்பான்சரை பெரும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவரது நினைவாக வீட்டில் இரங்கல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஜியாதை தனது மகனைப்போல் நேசித்ததாகவும், தான் உயிருடன் இருக்கும் வரை அவர் சம்பளத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்குத் தருவதாகவும் ஸ்பான்சர் தெரிவித்துள்ளார்.


மரணமான ஜியாதின் உடல் கடந்த திங்கள்கிழமை(16ஜூன்) பிற்பகல் ரியாத்தில் உள்ள நசீம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.


அவரது கபில் அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தனது வயதையும் மீறி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு கல்லறைக்குள் இறங்கி அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்தார். 

No comments

Powered by Blogger.