Header Ads



வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, உயர்வை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு,  கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று (26)  உயர்வை எட்டியது. 


அதன்படி, இன்றைய நாள் வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 17,740.46 அலகுகளாக பதிவாகியுள்ளது. 


ஜூன் 12 ஆம் திகதி அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 17,661.5 வரலாற்றில் அதிக அலகுகளாக பதிவாகியிருந்தது. 


இந்நிலையில் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில் S&P SL20 குறியீடு 46.34 புள்ளிகள் உயர்வடைந்து, 5,265.35 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 


இன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.85 பில்லியன்களாக பதிவு செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.