Header Ads



இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்


2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 7.14 சதவீத வளர்ச்சியாகும். 


மே 2025 இல் பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவுகளில் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது மே 2024 வருடத்துடன் ஒப்பிடும்போது 6.35% வருடாந்த வளர்ச்சியாகும். இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் செயல்திறனையும், சந்தைகளை பன்முகப்படுத்துவதற்கும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தையும் பிரதிபலிப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. 


2025 மே மாதத்தில் மாத்திரம், வணிக பொருட்கள் ஏற்றுமதி வருடத்திற்கு 1.70 சதவீதம் அதிகரித்து 1,028.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய, இந்த எண்ணிக்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் மற்றும் பெற்றோலிய பொருட்களிலிருந்து மதிப்பிடப்பட்ட வருமானமும் உள்ளடங்கும். 2025 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதி 5,344.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.46 சதவீத அதிகமாகும். 


மொத்த ஏற்றுமதி வளர்ச்சியில் சேவை ஏற்றுமதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025 மே மாதத்தில் சேவை ஏற்றுமதி வருமானம் 358.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சேவை ஏற்றுமதி 13.20 சதவீதம் அதிகரித்து 1,589.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வளர்ச்சி இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 


தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)/வணிக செயல்முறை முகாமைத்துவம் (BPM), கட்டுமானம், நிதி சேவைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைகளின் ஊடாக, நாட்டின் ஏற்றுமதித் துறையை பன்முகப்படுத்தி நாடளாவிய ரீதியாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

No comments

Powered by Blogger.