Header Ads



4 தசாப்தங்களுக்கு பின், மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழர்


மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (2025.06. 23)  பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற குறித்த தவிசாளர் தெரிவில்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த செல்வரெத்தினம் பிரகலாதன்  மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . கடந்த நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.


இன்றைய தவிசாளர் தெரிவில் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 உறுப்பினர் கலந்து கொண்டனர். இவர்களில் இலங்கை தமிழரசு கட்சி 5, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 4 , தேசிய மக்கள் சக்தி சார்பில் 3, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3, ஐக்கிய மக்கள் சக்தி 2, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 2, தேசிய காங்கிரஸ் 1, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 1, சுயற்சைக் குழு 1 என இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.


தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டனர் இதில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சியைச் சேர்ந்த  செ.பிரகாலதன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.றிபான்  போட்டியிட்டனர். இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சபையை கைப்பற்றியது. குறித்த சபையில் உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.டி.எம்.பைசர் தெரிவு செய்யப்பட்டார்.

Hasfar

No comments

Powered by Blogger.