Header Ads



இந்நாட்டின் மிகப்பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்

 


இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 


இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்துவதாக வாக்களித்து பதவிக்கு வந்தது. ஆனால் இதுவரை அவர்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.


அதே ​நேரம் இந்த நாட்டின் மிகப் பெரும் பொய்யர் ஒருவரை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.


பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசாங்கத்தை நடத்திச் செல்ல முற்படும் ஜனாதிபதி ஒருவரை மக்கள் கண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.