பாகிஸ்தான் கொடியை இந்தியாவில் ஒட்டிய, இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது
இந்தியா மேற்கு வங்காளத்தில் சநாதனி ஏக்தா மஞ்ச் என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் "மத கலவரத்தை" தூண்டும் நோக்கில் பொது இடத்தில் பாகிஸ்தான் கொடியை ஒட்டியதாக ஏப்ரல் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
கொடியை ஒட்டியது மட்டுமல்லாமல், அப்பகுதியில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாக "ஹிந்துஸ்தான் முர்தாபாத்" மற்றும் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று எழுதவும் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் சதித்திட்டங்களைத் தீட்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் எந்த முயற்சியையும் விடமாட்டோம் என்று போங்கான் போலீசார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Post a Comment