Header Ads



நேற்று கைதான இளைஞர், இன்று பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழப்பு


நேற்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், இன்று -02- மதியம் கொஸ்கொட பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். 


கொஸ்கொட ஹதரமன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த தரிந்து சிறிவர்தன டி சொய்சா (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.


சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.


நேற்று பிற்பகல் திடீரென சுகவீனமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அவரது மகன் இறக்கும் வரை பொலிஸார் அவரை கடுமையாக துன்புறுத்தியதாக அவரது தந்தை நிமல் சிறிவர்தன டி சொய்சா கூறினார். 


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு சென்ற எல்பிட்டிய எஸ்எஸ்பி லக்கி ஜெயவர்தன, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் யாராவது இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.