கனடா வெளியுறவு அமைச்சராக, இந்திய வம்சாவளி பெண்
கனடா வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டு ”கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கின்றேன். பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும், பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன்” என அவர் ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
ஓக்வில்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை தமிழகத்தை சேர்ந்தவர். தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் மருத்துவர்கள் ஆவார்கள். 58 வயதான அனிதா ஆனந்த் 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.
Post a Comment