Header Ads



ரயிலுடன் மோதி சிதைவடைந்த ஆட்டோ


அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில், இன்று (02) காலை ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

 

இந்த விபத்தில்  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்தவர் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண்ணாவார்.

 

பெலியத்தவில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலுடன் இந்த முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

No comments

Powered by Blogger.