Header Ads



லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் பயணித்த காரின்மீது துப்பாக்கிச் சூடு


நாரஹேன்பிட்டி பகுதியில் இன்று இரவு (17)  தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும், சட்டத்தரணியும் இருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான கோப்பை யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 


துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.


அதேநேரம் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துசித ஹல்லோலுவ மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.