நமது படைகளின் வீரமும், துணிச்சலும்தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்துவிட்டது
குஜராத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவை யார் அச்சுறுத்த நினைத்தாலும் அதற்கான பதிலடி, அவர்கள் வழியிலேயே கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய, 22 நிமிடங்களில் இந்தியாவில் பலம் என்ன என்பது அவர்களுக்கு நிரூபிக்கப்பட்டது. நமது படைகளின் வீரமும், துணிச்சலும் தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்து விட்டது. பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க வேண்டும். பாகிஸ்தான் குடிமக்கள் உண்ணும் உணவு அமைதியான சூழலுக்கு மத்தியில் இருக்க வேண்டுமே தவிர தோட்டாக்களுக்கு மத்தியில் அல்ல. வறுமையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும், தீங்கு ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment