Header Ads



பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முற்றுகை


பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.  


“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, ”அதிபரை கைது செய்” “இறுதி வரை போராடுவோம்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய்”,“கைது செய்”, “கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும்,வேண்டும் நீதி வேண்டும்” என்று கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


இதேவேளை பாலியல் வன்புணர்ந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தனர். அங்கு குழுமியிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள், “எங்கள் பிள்ளை” “எங்கள் பிள்ளை” என உணர்வு பூர்வமாக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.


தொடர்ந்து பாடசாலைக்கு முன்னாள் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.