பிரதமருக்கு கொலை மிரட்டல்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment