நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன், நான் புறப்படுகிறேன் - விராட்
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று -12- திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
"இந்த வடிவத்திலிருந்து நான் விலகுவது எளிதானது அல்ல, ஆனால் அது சரியான முடிவாக உணர்கிறது. நான் அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட இது எனக்கு மிக அதிகமாகவே திருப்பித் தந்துள்ளது, "விளையாட்டுக்காகவும், நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காகவும், என்னைப் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு நபருக்காகவும், நான் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் புறப்படுகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
Post a Comment