Header Ads



500 கிலோ ஹெரோய்ன், ஐஸூடன் 2 படகுகள் சிக்கின : 11 பேர் கைது


இலங்கை கடற்படையினரால்   தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (27) தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவற்றைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.


இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் பதினொரு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட நபர்கள் தெவிநுவரவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.