Header Ads



இலங்கை - UAE கூட்டு வர்த்தக சபையை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்


இலங்கைக்குத் விஜயம் செய்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான மேதகு ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று (22) வரவேற்றார்.


இதுகுறித்து அமைச்ர் குறிப்பிட்டுள்ளதாவது,


இந்த சந்திப்பின் போது, வர்த்தக முதலீடு, சுற்றுலா, எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பல ஆண்டுகளாக வளரும் நம் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த களந்துறையாடினோம்.


மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனமும் இணைந்து "ஐக்கிய அரபு எமிரேட்ஸ்–இலங்கை கூட்டு வர்த்தக சபை"யை நிறுவுவதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்றோம்.


இப்புதிய முயற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, வணிக உறவுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றது.

No comments

Powered by Blogger.