நான் இனி உன்னை, எப்படி அணைத்துக் கொள்வது..? நெஞ்சம் நெகிழச் செய்கின்ற செய்தி
மஹ்மூத் அஜ்ஜூர் என்கிற எட்டு வயது பாலஸ்தீன சிறுவனின் இந்தப் படத்தை 2025 ஆம் ஆண்டின் சிறந்த படமாக World Press Photo of the year அறிவித்திருக்கின்றார்கள்.
இஸ்ரேலின் கொடூர முகத்தை உணர்த்துகின்ற அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் உறுதியையும் தீரத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.
தற்போது கத்தாரில் சிகிச்சை பெற்று செயற்கைக் கைகள் பொருத்தப்படுவதற்காகக் காத்திருக்கின்ற மஹ்மூத் சற்றும் துவண்டுவிடவில்லை. கால்களைக் கொண்டு எழுத கற்றுக்கொண்டிருக்கின்றார். மீண்டும் காஸாவுக்குத் திரும்பிவிடவே விரும்புகின்றார்.
இவருடைய படத்தை எடுத்தவரும் சமர் அபூ எலூஃப் என்கிற சகோதரிதான். காஸாவைச் சேர்ந்த சமர் இன்றும் சளைக்காமல் இயங்கி வருகின்றார். போர்க் கொடுமைகளை அம்பலப்படுத்தி வருகின்றார்.
சமர் சொன்ன ஒரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்கின்றது. மஹ்மூதின் தாய் சமரிடம் பகிர்ந்து கொண்ட கேள்விதான் அது.
இரண்டு கைகளையும் இழந்த எட்டு வயது பாலகன் தன்னுடைய தாயிடம் கேட்ட முதல் கேள்வி : ‘இனி நான் உன்னை எப்படி அணைத்துக் கொள்வது, அம்மா?’
Azeez Luthfullah

Post a Comment